உடல் சூட்டை தணிக்க வெட்டி வேரை இப்படி பயன்படுத்துங்க...!
By Kanimozhi Pannerselvam
07 Mar 2025, 10:09 IST
வெட்டிவேர் நீர்
வெட்டிவேரை நன்றாக கழுவி, ஒரு மண் சட்டியில் 1 லிட்டர் தண்ணீருடன் ஊற வைக்கவும். 6-8 மணி நேரம் ஊறிய பிறகு, அதை வடிகட்டி, அந்த நீரை குடிக்கலாம். தினமும் 1-2 கப் வெட்டி வேர் நீர் குடிப்பதால் உடல் சூடு குறையும்.
வெட்டிவேர் நீர் குளியல்
2-3 கைப்பிடி வெட்டிவேரை 2 லிட்டர் நீரில் 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும். அந்த நீரை வடிகட்டி, வெதுவெதுப்பாக குளிக்கலாம். இது உடலில் தேங்கிய வெப்பத்தை வெளியேற்றும்.
வெட்டிவேரை நீரில் 6-8 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வடிகட்டிய பிறகு, பனங்கற்கண்டுடன் கலந்து குடிக்கலாம்.
வெட்டிவேர் ஃபர்பியூம்
வெட்டிவேரை பட்டு துணியில் கட்டி, படுக்கை அருகே வைக்கலாம். இதன் வாசனை மூளையை சீராக வைத்து, மனஅழுத்தத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரும்.
வெட்டிவேர் எண்ணெய்
வெட்டிவேர் எண்ணெயை ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, சில துளிகளை காய்ந்த சருமத்தில் தடவலாம். இதை முடிக்கு தடவினால் வெயில் பாதிப்பை குறைக்கும். வெட்டி வேர் எண்ணெயை குளியல் நீரில் சில துளிகள் சேர்த்தால் மன அமைதி கிடைக்கும்.
வெட்டிவேர் பானகம்
வெட்டிவேரை பொடித்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து அருந்தலாம். இதில் இஞ்சி, எலுமிச்சை, பனங்கற்கண்டு சேர்த்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். இது குடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீரகங்களை சுத்தம் செய்யும்.
வெட்டிவேர் சோப்
உடல் சூட்டை தணிக்கவும், சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கவும் வீட்டிலேயே வெட்டிவேர் கொண்டு சோப் தயாரித்து பயன்படுத்தலாம்.