பைசா செலவில்லாமல் இந்த 3 நோய்களை விரட்ட.... சஞ்சீவினி மூலிகை இதோ!

By Kanimozhi Pannerselvam
30 Dec 2024, 11:18 IST

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

தொட்டால் சிணுங்கி செடியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும். செரிமானத்தை சீராக்குகிறது.

நீரிழிவு நோய்

தொட்டால் சிணுங்கி இலைகள் மற்றும் வேர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இதன் வேர் பொடியை உட்கொள்வதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதிகாலையில் சாறு உட்கொள்வது சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

வலி, வீக்கம்

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். காயம், சுளுக்கு அல்லது மூட்டு வலி மீது தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதன் இலைகளை பேஸ்ட் செய்து வலி உள்ள இடத்தில் தடவவும்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு இருந்தால், தொட்டால் சிணுங்கி இலையை சுத்தப்படுத்தி சின்ன வெங்காயம் மற்றும் சீரகத்தை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம்.

தேநீராக பயன்படுத்தவும்

தொட்டால் சிணுங்கி இலைகளை ஊறவைத்து தேநீர் தயாரிக்கலாம். இது செரிமானம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு நன்மை பயக்கும்.