மான்சூனில் இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த 5 ஹெர்பல் டீ குடிங்க

By Gowthami Subramani
09 Jul 2025, 21:47 IST

மழைக்காலம் நமக்கு கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் தரக்கூடிய காலமாகும். ஆனால், இந்த காலகட்டத்தில் நோய்த்தொற்றுக்கள் அபாயம் அதிகம் இருக்கும் காலமாகவும் அமைகிறது. இந்நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதில் மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர் வகைகளைக் காணலாம்

இஞ்சி டீ

இஞ்சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், தொண்டை புண்ணிலிருந்து நிவாரணம் அளிக்கவும், செரிமானத்திற்கும் உதவுகிறது

துளசி டீ

துளசி அதன் நுண்ணுயிர் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். நாள்தோறும் ஒரு கப் அளவிலான துளசி டீயை அருந்துவது தொண்டையை ஆற்றுவது மட்டுமல்லாமல் சுவாச நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது

கிலோய் டீ

இது பண்டைய காலங்களிலிருந்து பாரம்பரிய மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படக்கூடியதாகும். மழைக்காலங்களில் சளி மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த டீ மிகவும் நன்மை பயக்கும்

லெமன் கிராஸ் டீ

இதில் வைட்டமின் சி உள்ளது. இவை உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும் பொதுவான தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது தவிர, இவை வீக்கத்தைக் குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

மஞ்சள் டீ

மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற கலவை, ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஒரு கப் மஞ்சள் தேநீர் குடிப்பது மழைக்காலத்தில் காய்ச்சல் மற்றும் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கிறது

குறிப்பு

மழைக்காலங்களில் ஒரு கப் மூலிகை தேநீர் குடிப்பது இந்த காலகட்டத்தில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், தொற்றுக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. எனினும், இதை அதிகளவு எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும், கர்ப்பமாக இருந்தால் அல்லது வேறு உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே குடிக்க வேண்டும்