மழைக்காலம் என்றாலே உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படும். உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்கவும் ஆயுர்வேத மூலிகைகள் உதவுகின்றன
இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
மஞ்சள்
மஞ்சள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் முக்கிய பொருளாகும். இதை பாலில் சேர்த்து அருந்தலாம். எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது
அமிழ்தவள்ளி
அமிழ்தவள்ளியானது அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது
அஸ்வகந்தா
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மூலிகையில் அஸ்வகந்தாவும் உள்ளது. இது உடலின் வலிமையை அதிகரிக்க நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
மிளகு
இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் செரிமானத்தை தூண்டுவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினசரி உணவில் மிளகு சேர்ப்பது சளி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கச் செய்கிறது