குப்பைமேனி இலையில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது தெரியுமா? இதில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
மலச்சிக்கல் தீரும்
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், குப்பைமேனி இலையை ஜூஸ் செய்து குடிக்கவும். இது மலமிளக்கியாக திகழ்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னை தீர்கிறது.
சரும பாதிப்புகள் நீங்கும்
குப்பைமேனி சாறுடன் சுண்ணாம்பு கலந்து, தோல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தடவவும். இது சொரி. சிரங்கு போன்ற தோல் சார்ந்த பிரச்னைகளை நீக்குகிறது.
குடல் புழுவை அகற்றும்
வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்ற குப்பைமேனி இலை சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கவும்.
வாந்தியை கட்டுப்படுத்தும்
அடிக்கடி வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களா? அப்போ குப்பைமேனி இலை இருந்தால் மட்டும் போதும். இதனை கொண்டு பற்று போடலாம்.
காயத்தை ஆற்றும்
காயங்களுக்கு சிகிச்சையளிக்க குப்பைமேனி இலையை பயன்படுத்தலாம். இதன் சாறை காயம்பட்ட இடத்தில் தடவவும். இது காயத்தை ஆற்றும்.