உடல் எடை சரசரவென குறைக்க உதவும் பெஸ்ட் மூலிகைகள்!

By Karthick M
22 Jun 2025, 09:01 IST

உடல் எடையை குறைக்க பலர் சிரமங்களை மேற்கொள்கின்றனர். இதை குறைக்க பல மூலிகைகள் பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய மூலிகைகளை பார்க்கலாம்.

வெந்தயம்

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்தும், இதனால் உடல் எடை கட்டுப்படும். இது இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்துகிறது.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தையும் குறைக்கிறது. கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உடல் எடையை அப்படியே குறைக்கும்.

மிளகு

மிளகுத்தூள் நமது வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது. இவற்றை உட்கொள்வதால், உடலில் உள்ள கலோரிகள் மிக விரைவாக கரையும்.

திரிபலா

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை திரிபலா ஆகும். இது உடல் நச்சுக்களை வெளியேற்றி செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.