ஒற்றைத்தலைவலியைப் போக்க சில யோகாசனங்கள் உதவுகிறது. இதில் ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவும் யோகாசனங்கள் சிலவற்றைக் காணலாம்.
ஒட்டக போஸ்
இந்த ஆசனம் செய்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும், ஒற்றைத்தலைவலியைப் போக்கவும் உதவுகிறது
சவாசனம்
சவாசனத்தில் ஒருவர் பாயில் நேராக படுத்து ஓய்வெடுக்க வேண்டும். இது பதற்றத்தை நீக்கவும், மன அமைதியை அளிக்கவும் உதவுகிறது
பிரிட்ஜ் போஸ்
பாலம் போஸ் செய்வது தசைகளில் இருந்து பதற்றத்தை விடுவிக்கிறது. இவை தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
பலாசனா
இந்த யோகாசனம் செய்வது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆக்ஸிஜன் மூளைக்கு நன்றாக சென்றடைவதை ஊக்குவிக்கிறது
உத்தனாசனம்
உத்தனாசனம் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதை ஊக்குவித்து, ஒற்றைத் தலைவலியைக் குணமாக்குகிறது
பவன்முக்தாசனம்
ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய காரணமாக அமைவது வயிற்று வாயு ஆகும். பவன்முக்தாசனம் செய்வது செரிமானத்தை மேம்படுத்தி, ஒற்றைத் தலைவலியைக் குறைக்கிறது