பருவகால மாற்றத்தின் போது ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க சில யோகாசனங்களை மேற்கொள்ளலாம். இதில் மழைக்காலத் தொற்றுக்களைத் தவிர்க்க செய்ய வேண்டிய யோகாசனங்களைக் காணலாம்
விருட்சாசனம்
இந்த ஆசனம் செய்வது கவனம் மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது. இந்த ஆசனத்தைச் செய்வதன் மூலம் மழைக்காலத் தொற்றுக்களைத் தவிர்க்கலாம்
தடாசனா
மழைக்காலத்தில் சமநிலை மற்றும் தோரணையை பராமரிக்க தடாசனா உதவுகிறது. இது உடலை சமநிலையில் வைக்கவும், சுவாசத்தில் கவனம் செலுத்தவும் உதவுகிறது
பச்சிமோத்தாசனம்
பருவமழையின் பொதுவான விளைவு சோம்பல் ஆகும். பச்சிமோத்தாசனம் செய்வது சோர்வைக் குறைக்க மற்றும் முதுகெலும்பை நீட்டுவதற்கு உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது
புஜங்காசனம்
மழைக்கால நோய் அறிகுறிகளாக முதுகு அசௌகரியம் ஏற்படலாம். முதுகெலும்பை வலுப்படுத்த புஜங்காசனம் சிறந்த நிவாரணமாக அமைகிறது. இந்த பருவத்தில் ஆரோக்கியமான செரிமானத்தை அதிகரிக்க புஜங்காசனம் சிறந்த தேர்வாகும்
திரிகோணசனா
இந்த ஆசனம் நுரையீரல் திறனை மேம்படுத்தவும், சுவாச ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இந்த ஆசனம் மழைக்காலத் தொடர்பு பிரச்சனைகளான சுவாசம் மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்