சில யோகாசனங்களின் உதவியுடன் தைராய்டை கட்டுப்படுத்த முடியும். இதில் தைராய்டு ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய யோகாசனங்களைக் காணலாம்
ஹலாசனா
ஹலாசனா செய்வது தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளைத் தூண்டி, கழுத்துப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் சிறந்த ஹார்மோன் ஒழுங்குமுறையை ஊக்குவிக்கிறது
புஜங்காசனம்
கோப்ரா போஸ் என்றழைக்கப்படும் இந்த ஆசனம் கழுத்து மற்றும் தொண்டை பகுதியை நீட்டுகிறது. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டி, அதன் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது
மச்சாசனம்
ஹைப்போ தைராய்டிசத்தை எதிர்ப்பதற்கு மச்சாசனம் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சியில் கழுத்து, தொண்டை நீட்டப்பட்டு தைராய்டு சுரப்பிகளைத் தூண்டுகிறது. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த ஆசனத்திலிருந்து பயனடையலாம்
சர்வாங்காசனம்
இந்த ஆசனம் உடலின் மேல் சுரப்பிகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதன் மூலம் தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தனுராசனம்
தனுராசனம் தைராய்டு சுரப்பிகளுக்கு ஆற்றல் ஓட்டத்தைத் தூண்டுகிறது. மேலும் இது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஆஸ்துமாவைப் போக்க உதவுகிறது
உஸ்ட்ராசனம்
இது தைராய்டு செயல்பாட்டைத் தூண்டி, தைராய்டு சுரப்பிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், தைராய்டு சுரப்பியை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது