தினமும் தியானம் மேற்கொள்வது உடல் மற்றும் மனதின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் தினமும் 5 நிமிடங்கள் தியானம் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்
கவனத்தை மேம்படுத்த
மனதைப் பயிற்றுவிக்க தியானத்தை மேற்கொள்ளலாம். இது பணிகளின் மீது கவனம் செலுத்துவதற்கான திறனை மேம்படுத்துகிறது
அதிகரித்த சுய விழிப்புணர்வு
தியானம் மேற்கொள்வது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு கவனம் செலுத்த உதவுகிறது. இது தியானம் செய்பவர்களின் ஆழமான புரிதலைப் பெற உதவுகிறது
நேர்மறை எண்ணங்கள்
வழக்கமான தியானம் மேற்கொள்வது எதிர்மறை எண்ணங்களைக் குறைத்து நம்பிகைக்கான கண்ணோட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மனநிலையை சாதகமாக பாதிக்கிறது
குறைந்த மன அழுத்தம்
தினமும் 5 நிமிடங்கள் தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கவும் உதவுகிறது
தூக்கத்தை மேம்படுத்த
தியானம் செய்வது தூங்குவதற்கு முன்னதாக மனதை அமைதிப்படுத்துகிறது. இது நல்ல மற்றும் சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது