யோகாவிற்கு முன்னும் பினனும் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
உணவு எடுத்துக் கொண்ட 45 நிமிடங்களுக்குப் பின் யோகா செய்வதைத் தொடங்கலாம். காலை யோகா பயிற்சி செய்ய விரும்புபவர்கள் வாழைப்பழம், பெர்ரி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
தயிர் மற்றும் உலர்ந்த பழங்கள், முட்டை, வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் ஷேக்குகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளுடன் யோகா செய்யலாம்.
மாலை நேரங்களில் யோகா செய்பவர்கள், யோகா செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே லேசான சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்ளலாம்.
யோகா செய்த 30 நிமிடங்களுக்குப் பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் குடிப்பதன் மூலம், யோகா செய்யும் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீண்டும் பெறலாம்.
யோகா செய்த பிறகு சத்தான ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய பழங்கள், காய்கறி சாலட்கள், நட்ஸ் மற்றும் தானியங்களுடன் கூடிய தயிர் ஆகியவற்றை சாப்பிடலாம்.