எடையிழப்பு முதல் மன ஆரோக்கியம் வரை.. பாலாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
08 Jun 2025, 09:09 IST

குழந்தை போஸ் என்றழைக்கப்படும் பாலாசனா செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இந்த ஆசனத்தின் பெயர் பாலா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் பாலாசனா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

உடல் எடை இழப்புக்கு

பாலாசனா செய்யும் போது முன்னோக்கி குனிவது வயிற்றில் சேரக்கூடிய கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கலாம்

தசை வலிமைக்கு

தசைகளை வலுவாக வைத்திருப்பதில் பாலாசனா சிறந்த தேர்வாகும். இந்தப் பயிற்சியில் இடுப்பு, கணுக்கால் மற்றும் தொடைகளை நீட்ட உதவுகிறது

முதுகு வலி நீங்க

கடுமையான முதுகு வலி பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் பாலாசனா செய்வது மிகுந்த நன்மை பயக்கும். இந்த ஆசனம் செய்வது முதுகு, தோள்பட்டை மற்றும் கால்களில் ஏற்படும் வயிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

மன அழுத்தத்தைக் குறைக்க

குழந்தை போஸ் என்றழைக்கப்படும் பாலாசனா செய்வது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பாலாசனம் செய்யும் முறை

இந்த ஆசனம் செய்ய முதலில் குதிகால் மற்றும் இடுப்பின் உதவியுடன் உட்கார்ந்து, பின் முன்னோக்கி குனிந்து நெற்றியை தரையில் வைக்க வேண்டும். பிறகு கைகளை உடலின் இருபுறமும் முன்னோக்கி நீட்டில் தரையில் வைக்கலாம். இதில் மார்பிலிருந்து தொடைகளில் மெதுவாக அழுத்த வேண்டும். இந்நிலையில் சிறிது நேரம் இருந்து, பின் மெதுவாக எழுந்து குதிகால் மீது உட்கார்ந்து முதுகெலும்பை நேராக வைக்க வேண்டும்

குறிப்பு

கர்ப்பிணிகள் பாலாசனம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இது தவிர, உயர் இரத்த அழுத்த நோயாளிகளும் பாலாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்