நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் பிராணயாமா பயிற்சிகள்

By Gowthami Subramani
04 Mar 2025, 22:33 IST

பிராணயாமம் என்பது ஒரு பழங்கால சுவாச நுட்பத்தைக் குறிக்கிறது. இது சுவாசத்தை வெவ்வேறு வழிகளிலும், நீளங்களிலும் கட்டுப்படுத்துவதை உள்ளடக்கியதாகும். இதில் நுரையீரல் திறன் மற்றும் சுவாச செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய பிராணயாமாக்களின் வகைகளைக் காணலாம்

அனுலோம் விலோம் பிராணயாமா

இந்த வகை பிராணயாமம் இரண்டு நாசித் துவாரங்களுக்கு இடையே காற்றுப் பாதையை சமநிலைப்படுத்துகிறது. இந்த சுவாசத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நுரையீரல் திறனை மேம்படுத்தவும் முடியும். இவை இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சிறந்த ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது

நாடி சோதனா பிராணயாமா

இந்த பிராணயாமம் மாற்று நாசி சுவாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உடலை நச்சு நீக்கி, தடுக்கப்பட்ட ஆற்றல் பாதைகளை சுத்தம் செய்வதன் மூலம் நுரையீரலை சிறப்பாக செயல்பட வைக்கிறது. மேலும், மன தெளிவை மேம்படுத்தவும், பதட்டம், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது

கபாலபதி பிராணயாமா

இது செயலற்ற உள்ளிழுப்புடன், விரைவான, சக்திவாய்ந்த மூச்சை வெளியேற்றுவதாகும். இந்த சுவாசத்தின் மூலம் சுவாசக் குழாயைச் சுத்தப்படுத்தவும், நுரையீரல் திறனை விரிவுபடுத்தவும், ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இவை மூச்சை வெளியேற்றுவதன் மூலம் நச்சுகளை வெளியிடுவதால் உடலை நச்சு நீக்குகிறது

உஜ்ஜயி பிராணயாமம்

இது மூக்கு வழியாக சுவாசிக்கும்போது தொண்டையில் காற்று உராய்ந்து உருவாகும் ஒலியை அடிப்படையாகக் கொண்ட பிராணாயாமம் ஆகும். இது சிறந்த காற்றோட்டத்தை ஊக்குவிக்கவும், நுரையீரலை பலப்படுத்தவும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

பிரமாரி பிராணயாமா

இது மூச்சை வெளியேற்றும்போது ஒரு ஹம்மிங் ஒலியை எழுப்புவதை உள்ளடக்கியதாகும். இது மன அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. மேலும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சுவாச தசைகள் மற்றும் மார்பில் உள்ள பதற்றத்தை நீக்குகிறது. இது சிறந்த சுவாசம் பெற உறுதி செய்கிறது