ஆஸ்துமா நோயாளிகளுக்கு பலன் தரக்கூடிய 5 யோகாசனங்கள்!

By Kanimozhi Pannerselvam
08 Nov 2024, 12:35 IST

புஜங்காசனம்

இந்த ஆசனம் செய்வதால் மார்பு மற்றும் வயிற்றின் தசைகள் நீண்டு நுரையீரல் செயல்பாடு மேம்படும். மேலும், புஜங்காசனம் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

சேது பந்தாசனம்

இந்த ஆசனம் மார்பு தசைகளுக்கு பயிற்சி அளிக்கிறது. மேலும் நுரையீரல் திறனும் அதிகரிக்கிறது. இந்த ஆசனம் முழங்கால்கள் மற்றும் இடுப்பு, தொடைகள், வயிறு ஆகியவற்றின் தசைகளுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் பயனடைகிறது.

மத்ஸ்யாசனம்

உங்கள் நுரையீரலின் செயல்திறனை பெரிதும் அதிகரிக்கிறது. இது தொண்டை மற்றும் கழுத்து தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

பிராணாயமம்

ஆஸ்துமா நோயாளிகள் யோகாவுடன் தினமும் பிராணாயாமமும் செய்ய வேண்டும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சைனஸ் நோயாளிகளுக்கு பாஸ்கிரிகா, பிராணயாமம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அனுலோம்-விலோம்

எளிதான பிராணயாமமான இதை தினமும் 5 முதல் 8 நிமிடங்கள் வரை செய்தாலே போதும். ஒரு நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து மற்றொன்றின் வழியாக வெளிவிடவும். இந்த செயலை அடிக்கடி செய்து வந்தால், ஆஸ்துமா, தலைவலி, ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.