தொப்பை குறைய இத செய்ங்க போதும்.!

By Ishvarya Gurumurthy G
21 Dec 2023, 01:18 IST

தொப்பையால் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம். யோகா ஆசனங்கள் மூலம் தொப்பையை எளிதில் குறைக்க முடியும்.

நவாசனம்

தரையில் உட்கார்ந்து, உங்கள் கைகளை முன்னோக்கி நீட்டி எலும்புகளை சமநிலைப்படுத்தவும். இது முழு உடலுக்கும் வேலை கொடுக்கும் வகையில் உள்ளது. இது வயிற்று தசைகளை டன்னிங் செய்கிறது.

பலகாசனம்

கைகளை உங்கள் தோள்பட்டைகளுக்கு கீழ் வைத்து தொடங்கும். தலை முதல் குதிகால் வரை ஒரு நேர்கோட்டை பராமரிக்கவும். இந்த ஆசனம் முழு உடலுக்கு வேலை தருகிறது.

தனுராசனம்

தரையில் குப்புற படுத்து, கால்களை தூக்கி, இரண்டு கைகளால் காலை பிடித்துகொள்ள வேண்டும். இடுப்பு அகலத்திற்கு முழங்கால்களை அகலமாக்கவும். பின்னர் வயிற்று தசைகளை வலுப்படுத்தி, உடல் மற்றும் தொடைகளை தூக்கி வில் போன்ற அமைப்பில் இருக்கவும்.

புஜங்காசனம்

தரையில் குப்புற படுத்துக்கொண்டு, கைகளை மார்பகங்களுக்கு அருகில் வைக்க வேண்டும். தற்போது உள்ளங்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து, இடுப்பு பகுதி தரை தொட்டவாறு, மார்பை தரையில் இருந்து மேல் நோக்கி உயர்த்தவும். பாம்பு போல் உங்கள் உடலை வளைக்கவும்.

சேது பந்தாசனம்

தரையில் படுத்து, முதுகில் அழுத்தம் கொடுத்து, முழங்கால்களை வளைத்து, கால்களை இடுப்பு அகலத்தில் வைக்கவும். தற்போது இடுப்பை தரையில் இருந்து உயர்த்துவதன் மூலம் பாலம் போன்ற அமைப்பு கிடைக்கும். இது வயிறு தசைகளை பலப்படுத்தும்.

இந்த ஆசனங்களில் இருந்து பல பலன்களை பெற முடியும். சரியான சீரமைப்பு மற்றும் சுவாச முறைகள் மூலம் பயிற்சி செய்வதை உறுதிசெய்யவும்.