தியானம் செய்யும் போது மனதை அமைதிப்படுத்தவும், சுவாசத்தில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. தியானத்தின் போது வைத்திருக்க வேண்டிய சில முத்திரைகள் மையப் புள்ளிகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தியான அனுபவத்தை மேம்படுத்துகிறது. இதில் தியானத்தின் போது முத்திரைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைக் காணலாம்
வாயு முத்திரை
இது பதட்டத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது. வாயு முத்திரை செய்ய, கட்டைவிரலின் கீழ் வைத்து, மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டலாம். இது பதட்டம், அமைதியின்மையை நிர்வகிக்க உதவுகிறது
ஞான முத்திரை
ஞான முத்திரை ஞானம் மற்றும் அறிவுடன் தொடர்புடையதாகும். இதற்கு கட்டைவிரலின் நுனியை உங்கள் ஆள்காட்டி விரலின் நுனியில் தொட்டு, மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்ட வேண்டும். இது செறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது
பிராண முத்திரை
இது கட்டைவிரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனிகளை ஒன்றாகத் தொட்டு, மற்ற இரண்டு விரல்களையும் நீட்டி வைத்திருப்பதாகும். இது உயிர்ச்சக்தி மற்றும் ஆற்றலுடன் தொடர்புடையதாகும். இது உடலுக்குள் உயிர்ச்சக்தியை உற்சாகப்படுத்துவதாக கூறப்படுகிறது
அபான முத்திரை
இது நச்சு நீக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். இந்த முத்திரையானது கட்டைவிரல், நடுவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிகளை ஒன்றாகத் தொட்டு மற்ற விரல்களை நீட்டி வைத்திருப்பதை உள்ளடக்கியதாகும். இது செரிமானத்திற்கும் உடலில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது
விநாயகர் முத்திரை
இந்து தெய்வமான விநாயகர் பெயரைக் கொண்டு இருக்கும் இந்த முத்திரை இதயத்தை வலுப்படுத்தவும், தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. இதில் கைகளை உங்கள் இதயத்தின் முன் வைத்து, முழங்கைகள் வெளிப்புறமாக சுட்டிக்காட்ட வேண்டும்
பைரவ முத்திரை
இதில் ஒரு கையை மடியில் வைத்து, மற்றொரு கையை உள்ளங்கையில் வைப்பதாகும். இது பாதுகாப்பு உணர்வு மற்றும் உள் சமநிலையை வழங்குகிறது. இது பெரும்பாலும் ஆழ்ந்த தியானம் மற்றும் பிரதிபலிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது