பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு பல வகையான முத்ராக்கள் உதவுகிறது. இந்த முத்ராக்களின் உதவியுடன் சில குறிப்பிட்ட உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற முடியும். இதில் எந்த உடல்நல பிரச்சனைக்கு எந்த முத்ராக்கள் நன்மை தரும் என்பது குறித்து காணலாம்
வாயு முத்திரை
பெயரில் குறிப்பிட்டது போல, வாயு முத்ரா உடலில் வாயு உறுப்புகளின் நிலைத்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இந்த முத்ராவின் உதவியுடன் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும், ஹார்மோன்களை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது
வருண முத்திரை
வருண முத்திரை செய்வது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும், இது வயிற்றுப் புண்களின் அபாயத்தைக் குறைப்பதில் பங்கு வகிக்கிறது
ஞான முத்திரை
இது ஆற்றலை ஒருமுகப்படுத்த உதவுகிறது. இந்த முத்ரா செய்வது அனைத்து வயதினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, வயதானவர்களுக்கு ஞான முத்ரா மிகவும் முக்கியம். இந்த முத்திரை செறிவு மற்றும் மன திறனை மேம்படுத்துவதுடன், நல்ல நினைவாற்றலை பராமரிக்கிறது
பிராண முத்திரை
இது உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் நன்மை பயக்கும் முத்திரையாகும். இதைத் தொடர்ந்து பயிற்சி செய்து வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக மேம்படுத்தலாம். மேலும் உடல் பிடிப்புகள், பலவீனமான கண்கள், கால்களில் வலி போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது
அக்னி முத்திரை
இது செரிமானம், வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும், இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது