அதிக நேரம் செலவிடாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? அப்போ நீங்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள் இங்கே. ட்ரை பண்ணி பார்க்கவும்.
கோமுகாசனம்
இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது, உங்களுக்குப் பல நன்மைகளைத் தரும். உங்கள் கணுக்கால், இடுப்பு மற்றும் தொடைகளின் நீட்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேல் முதுகு, மார்பு மற்றும் தோள்களை நீட்சியடையச்செய்து, அலர்தலுக்கும் உதவுகிறது.
விருக்ஷாசனம்
உடலின் சமநிலையை மேம்படுத்த, இந்த யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்யலாம்.இடுப்பின் வெளிப்புற பகுதியை வளைக்கும் இந்த யோகா மூலம் உங்கள் முதுகெலும்பை வலுவாக்கலாம். இது பாதங்கள் மற்றும் கணுக்கால்களை வலிமையாக்க உதவுகிறது. மேலும், உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன நிம்மதியும் அளிக்கிறது.கவனச் சிதறல் ஏற்படாமல் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை வளர்க்க விரும்புபவர்கள் விருக்ஷாசனம் செய்யலாம்.
திரிகோனாசனம்
உச்சந்தலை முதல் பாதம்வரை, உடலை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாகக் கருத்தப்படுகிறது இந்த யோகாசனம். இது உங்கள் கால்கள், முதுகு மற்றும் மார்பை பலப்படுத்துகிறது. மேலும், தொடைத் தசைநார்கள், கெண்டைக்கால்கள் மற்றும் தோள்களை நீட்சியடையச்செய்யவும் உதவுகிறது.
பஸ்சிமோத்தாச்சனம்
உங்களுக்குத் தூக்கமின்மை போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த யோகாசனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலுக்குச் சுறுசுறுப்பைத் தருவதோடு, கவலை, மன அழுத்தம் போன்றவற்றை நீக்கவும் உதவுகிறது. மூளையை அமைதிப்படுத்தி, விரைவாகத் தூங்க உதவுகிறது.
தண்டாசனம்
ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள், இந்த யோகாசனத்தைப் பயிற்சி செய்து நல்ல பலன்களைப் பெறலாம். இது நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதனுடன், தசைகள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் இறுக்க பிரச்சனையையும் நீக்குகிறது.