40 வயதைக் கடக்கும் பெண்கள் இதை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

By Kanimozhi Pannerselvam
08 Mar 2025, 23:58 IST

கால்சியம்

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் இது உங்களது எலும்புகளுக்கு நல்ல வலிமை தரும். இதனால், உங்களுக்கு மூட்டு வலி ஏற்படாது பார்த்துக் கொள்ள முடியும்.

பால் உணவுகள்

பால், தயிர், சீஸ், போன்ற உணவுகளை உங்களது அன்றாட உணவு பழக்கத்தில் மறவாது அளவாக சேர்த்துக் கொள்ளுங்கள். இது அதிகமாக கால்சியம் சத்து உள்ள உணவுகள். அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம் இதில் கொழுப்புச்சத்தும் அதிகம் இருக்கின்றன.

உடல் பருமன்

உங்கள் உடல் பருமன் அதிகமாக இருந்தாலும் மூட்டு வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே உங்களது உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தசையை வலிமையாக்குங்கள்

உங்களது தசை பகுதிகள் வலிமையாக இருந்தால், உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. எனவே தசை பகுதிகளை வலிமையாக வைத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சியை மருத்துவரின் ஆலோசனைபடி செய்யுங்கள்

உடற்பயிற்சி

மூட்டு வலி வராமல் இருக்க வரும் முன் காக்கும் முயற்சி தான் சரியானது. சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மூட்டு வலி ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக குறைவு