கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன தெரியுமா?

By Gowthami Subramani
14 Feb 2025, 19:22 IST

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும். அவ்வாறு சில பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் சிலவற்றைக் காணலாம்

ஆப்பிள்

ஆப்பிளில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கிறது. மேலும் இவை செரிமானத்தை ஆதரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது

வாழைப்பழங்கள்

இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், பிடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது. இது நார்ச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இது செரிமானத்திற்கு உதவுவதுடன், கர்ப்ப கால மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது

பாதாமி

இது வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது சருமத்திற்கு முக்கியமானதாகும். இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரிக்கிறது

ஆரஞ்சு

இது வைட்டமின் சி நிறைந்த மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

கிவி

இதில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. மேலும் இது உடல் இரும்பை உறிஞ்ச உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது