உங்களுக்கு PCOS பிரச்சனையா? இயற்கையான முறையில் எப்படி சரி செய்வது என தெரியவில்லையா? இதோ, இந்த 5 உணவுகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
PCOS பிரச்சனையைக் குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். பீன்ஸ், கேரட், பீட்ரூட், ஆரஞ்சு, ஆப்பிள் ஆகியவற்றை உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சியா விதைகள்
PCOS பிரச்சனையைக் குறைக்க, பெண்கள் தங்கள் அன்றாட உணவில் சியா விதைகளைச் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
கேரட்
கேரட்டில் கால்சியம், இரும்புச்சத்து, பயோட்டின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட்டை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கருமுட்டை வெளியீடு தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. PCOS அல்லது PCOD பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாதாம்
பாதாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. PCOS அல்லது PCOD பிரச்சனை இருந்தால், பாதாம் பருப்பை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உணவுகள் அனைத்தும் PCOS அல்லது PCOD பிரச்சனையைக் குறைக்க உதவுகின்றன. இருப்பினும், இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன், உங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.