ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு நீங்க சாப்பிட வேண்டியவை

By Gowthami Subramani
17 Oct 2024, 09:08 IST

அன்றாட வாழ்க்கை முறை, மோசமான உணவுமுறை காரணமாக பெண்கள் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக ஒழுங்கற்ற மாதவிடாய் அமைகிறது. இதில் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்

இஞ்சி

மாதவிடாயின் ஓட்டத்தைத் தொடங்கும் கருப்பையைச் சுருக்க இஞ்சி உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு தீர்வாக அமைகிறது

அன்னாச்சி

மாதவிடாய் இரத்தம் முக்கியமாக கருவுறாத முட்டைகளை வெளியேற்றுகிறது. எனவே தான் கருப்பைச் சவ்வைக் குறைக்க அல்லது மென்மையாக்க உதவும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு ப்ரோமெலைன் என்ற நொதி நிறைந்த அன்னாச்சி உதவுகிறது

ஓமம்

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதைத் தவிர, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் ஓமம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு குணங்கள் மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் வலிகளைத் தடுக்க உதவுகிறது

இலவங்கப்பட்டை

இது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், PCOS உள்ள பெண்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகவும் அமைகிறது. மேலும் மாதவிடாய் வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளையும் கட்டுப்படுத்துகிறது

கரும்புச்சாறு

புதிய கரும்புச்சாறு அருந்துவது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. இது உடலுக்கு சீரான மற்றும் ஆரோக்கியமான நாளமில்லா அமைப்பை பராமரிக்க உதவுகிறது

பெருஞ்சீரகம்

மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு இது ஒரு பயனுள்ள தீர்வாகும். இதில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்ட அனெத்தோல் மற்றும் ஃபென்சோன் போன்ற கலவைகள் உள்ளது. இது மாதவிடாய் அசௌகரியங்களைத் தடுக்க உதவுகிறது

எள் விதைகள்

எள் விதைகளை மிதமான அளவில் சாப்பிடலாம். இது உடலில் அதிக வெப்பத்தை உருவாக்கி ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் சமநிலைக்கு உதவும் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டுள்ளது

குறிப்பு

இந்த உணவுகள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு உதவும் என்றாலும், இவை சிகிச்சைக்கு மாற்றாகக் கருதப்படவில்லை. எனவே, நிலைமைக்கு சிறந்த சிகிச்சையைப் பெற மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது