பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..

By Ishvarya Gurumurthy G
25 Feb 2024, 13:52 IST

பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அப்படி என்ன உணவுகளை அவை என்பதை இங்கே காண்போம்.

கருப்பு திராட்சை

குடல் ஆரோக்கியத்திற்கும், உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்கவும், பெண்கள் தினசரி உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்ளலாம்.

தேங்காய்

தேங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் சோர்வு நீங்கி எலும்புகள் வலுவடையும். மேலும், தைராய்டு பிரச்னைகளை தீரும்.

எள்

பெண்களின் நரம்பு மண்டலம், தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எள் சாப்பிடலாம்.

பேரீச்சம்பழம்

பெண்களின் சோம்பல், பலவீனம், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகியவற்றை சரி செய்ய பேரீச்சம்பழம் மிகவும் நல்லது.

நெல்லிக்காய்

பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சிறந்த தேர்வு. அவை குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.