மக்கானா சாப்பிடுவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

By Gowthami Subramani
05 Mar 2025, 20:33 IST

தாமரை விதைகள் என்றழைக்கப்படும் மக்கானா ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டியாகும். குறிப்பாக, இது பெண்களுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் பெண்கள் மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

எடை மேலாண்மை

மக்கானா குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவு புரதம், நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது உடலுக்கு திருப்தியை ஊக்குவிக்கிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்பு முயற்சிகளை ஆதரிக்கவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

மக்கானா அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் இயக்கங்களையும் ஆதரிக்கிறது. மேலும் இது மலச்சிக்கலைத் தடுக்கிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

மக்கானா கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்ததாகும். எனவே இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது

கருவுறுதலை ஆதரிக்க

மக்கானாவில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்து கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை கருவுறுதலை மேம்படுத்தவும், இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் வழிவகுக்கிறது

ஹார்மோன் சமநிலைக்கு

மக்கானாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மனநிலை மாற்றங்கள் மற்றும் பிடிப்புகள் போன்ற மாதவிடாய் முன் நோய்க்குறியின் அறிகுறிகளைக் குறைக்கிறது

சரும ஆரோக்கியத்திற்கு

மக்கானாவில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை இளமையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற ஊக்குவிக்கிறது. மேலும் இது வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது

பெண்கள் தங்கள் உணவில் மக்கானாவை சேர்த்துக் கொள்வது இது போன்று ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் ஒரு சுவையான மற்றும் சத்தான வழியாகும்