கர்ப்ப காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.
சத்துக்கள் நிறைந்தது
இரும்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பேரீச்சம்பழத்தில் காணப்படுகின்றன.
இரத்த சோகை நீங்கும்
கர்ப்ப காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் இரத்த சோகை ஏற்படாது. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களை இரத்த சோகை அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
சோரவு போகும்
பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் சோர்வு நீங்கும். உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்க பேரிச்சம்பழம் உதவுகிறது.
குழந்தைக்கு நன்மை
பேரீச்சம்பழத்தில் ஃபோலிக் அமிலத்தின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது பிறக்காத குழந்தையின் முதுகெலும்பு மற்றும் மூளை தொடர்பான பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கிறது.