பெண்கள் ஃபிட்டா, ஹெல்த்தியா இருக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
14 Mar 2024, 12:25 IST

பெண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க சில ஆரோக்கியமான நடைமுறைகளைக் கையாள வேண்டும். அதில் சிலவற்றை இங்கு காண்போம்

உணவு பராமரிப்பு

உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் பெண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். முழு உணவையும் துண்டிக்காமல், பகுதி மற்றும் மிதமான அளவில் சாப்பிடலாம். மேலும் புரதங்கள், கால்சியம் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவை எடுத்துக் கொள்ளலாம்

நிறைய தண்ணீர் குடிப்பது

அதிகளவு தண்ணீர் குடிப்பது உடலிலிருந்து நச்சுக்களை அகற்றுவதுடன், உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது

சரும பராமரிப்பு

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை விட, இயற்கையான பொருள்களையே பயன்படுத்த வேண்டும்

உடற்பயிற்சி

ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். நடைபயிற்சி, ஓடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்

நல்ல தூக்கம்

தூக்கமின்மை ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே தூக்க சுழற்சியை பராமரிக்க முயற்சிக்கலாம்