ஜூன்ஸ், லெகின்ஸ் போன்ற இருக்கமான ஆடைகளை அணிவதால் பெண்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து இங்கே காண்போம்.
ஈஸ்ட் தொற்று
இறுக்காமான அடைகள் வியற்வைகளை வெளியேற்றாது. வியர்வை அப்படியே படிவதால் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
சுறுக்கம்
இறுக்கமான அடைகள் பிறப்புறுப்பு மற்றும் அக்குளை சுற்றி சுறுக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு அதிக ஈரப்பதம் தான் காரணம்.
பருக்கள்
இறுக்கமான ஆடைகள் வியற்வையை வெளியேற்றாது. இதனால் சருமத்தி எண்ணெய் சுரப்பு அதிகரிக்கும். இதனால் பருக்கள் ஏற்படும்.
துர்நாற்றம்
இறுக்கமான ஆடைகள் வியற்வையை சரியாக உறிஞ்சாததால், வியற்வை உடலில் தங்கிவிடும். இதனால் உடலில் துர்நாற்றம் ஏற்படும்.
இரத்த ஓட்டம் பாதிக்கும்
இறுக்கமான ஆடைகள் இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நம் உடலில் சரியான இரத்த ஓட்டம் ஏற்படாது.
முதுகு வலி
இறுக்கமான உடைகள் முதுகு பக்கத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முதுகு வலி ஏற்படும். மேலும் இது தசை பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
வயிறு பிரச்னை
இறுக்கமான ஆடை மற்றும் பெல்ட் அணிவதால், செரிமான அமைப்பு பாதிக்கப்படும். இதனால் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்.