பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

By Karthick M
02 Aug 2024, 13:36 IST

தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பல பலன்களை அடைகிறார்கள். ஆனால் தங்கள் ஆரோக்கியத்தில் சில கூடுதல் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மனதில் கொள்ள வேண்டிய விஷயம்

பாலூட்டும் பெண்களுக்கு பசி இல்லை என்றாலும் தினசரி ஒவ்வொரு வேளைக்கும் சாப்பிட வேண்டும். அதேபோல் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது.

உணவில் கவனம் முக்கியம்

பாலூட்டும் பெண்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உடலுக்கு ஆற்றல் கிடைக்கும் உணவுகள், கால்சியம், புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஓய்வு மற்றும் மனநிலை

முறையான ஓய்வு எடுக்க வேண்டியது மிக முக்கியம். அதேபோல் மனநிலையை சீராக வைத்திருக்க வேண்டும். இது தாய்மார்களுக்கு மிக முக்கியம்.

தோரணை முக்கியம்

தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்கள் சரியான நிலையில் அமர வேண்டும். தங்கள் செயல்பாட்டு முறையில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆரோக்கியமே குழந்தை ஆரோக்கியம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.