இந்த காலக்கட்டத்தில் பல பெண்கள் மாதவிடாய் சுழற்சியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணமான முக்கிய பழக்கங்களை பார்க்கலாம்.
உண்ணாவிரதம் நன்மை பயக்கும் என்றாலும் வாத தோஷம் அதிகரிக்கலாம். உடலின் இயற்கையான தாளத்தை சீர்குலைத்து, பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய்களை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உடற்பயிற்சி பிராண வாயுவை சீர்குலைத்து, இனப்பெருக்க ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-ஓவரி (HPO) அச்சை பாதிக்கும்.
எடை இழப்பு உணவுகளில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கு வழிவகுக்கும்.
அதிகரித்த மன அழுத்தம் பெண்களின் உடலில் கார்டிசோலை அதிகரிக்கிறது. இது இனப்பெருக்க ஹார்மோனை அடக்கி மாதவிடாய் சுழற்சி பாதிப்பை ஏற்படுத்தும்.