உடலின் சிறந்த செயல்பாட்டில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமநிலையான ஹார்மோன்கள் பசி, தூக்கம், இனப்பெருக்கம் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது
சமநிலையற்ற ஹார்மோன்கள்
ஹார்மோனின் அளவு அதிகமாகவோ (அ) குறைவாகவோ இருக்கும்போது உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மைக்கான அறிகுறிகளைக் காண்போம்
சீரற்ற உடல் எடை
எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை அதிகரித்து அல்லது குறைந்து காணப்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாகும்
செரிமான பிரச்சனைகள்
வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான அல்லது குடல் பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின், அவை ஹார்மோன் சமநிலையின்மையின் காரணமாக இருக்கலாம்
மாதவிடாய் தாமதம்
பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக மாதவிடாய் தாமதம் ஏற்படலாம். அவ்வாறெனில் தைராய்டு கோளாறு அல்லது PCOS போன்றவற்றைச் சரிபார்க்க மருத்துவரை அணுக வேண்டும்
சரும பிரச்சனைகள்
முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்துடன், சருமத்தில் வறட்சி நீடித்திருப்பின், அவை ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளைக் குறிக்கிறது
குறைந்த ஆற்றல் உற்பத்தி
பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையின் காரணமாக குறைந்த ஆற்றல் மற்றும் நிலையான சோர்வு ஏற்படலாம். இதைத் தவிர்க்க சரியான வாழ்க்கை முறையை உருவாக்கலாம்.
மனநிலை மாற்றங்கள்
மனநிலை ஏற்ற இறக்கங்களான, பதட்டம், மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்றவை ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளாகக் கருதப்படுகிறது