பெண்களே உஷார்! இந்த அறிகுறி எல்லாம் ஹை யூரிக் ஆசிட்டைக் குறிக்கும்

By Gowthami Subramani
05 Jun 2025, 20:44 IST

உடல் பியூரின்களை உடைக்கும்போது உருவாகும் ஒரு கழிவுப் பொருளே யூரிக் அமிலம் ஆகும். சில உணவுகளில் பியூரின்கள் இயற்கையாகவே காணப்படுகிறது. இரத்தத்தில் சிறிது யூரிக் அமிலம் இருப்பது இயல்பானதாகும். எனினும், இதன் அதிகரித்த அளவு நாள்பட்ட மற்றும் வலிமிகுந்த உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்

குறிப்பாக, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, மாதவிடாய் நின்ற பிறகு, யூரிக் அமிலம் அபாயத்தை அதிகரிக்கும் பிரச்சனையைச் சந்திக்கின்றனர். இதில் பெண்களின் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் கண்டறியக்கூடிய அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்

கட்டிகள் தோன்றுவது

சில நேரங்களில் யூரிக் அமில படிகங்கள் டோஃபி எனப்படும் கட்டிகளை உருவாக்குகிறது. நீண்ட காலமாக அதிக யூரிக் அமிலத்தின் காரணமாக, மூட்டுகளைச் சுற்றியுள்ள தோலின் கீழ் இந்த கட்டிகள் உருவாக்கக்கூடும்

அடிக்கடி சோர்வு

ஓய்வெடுத்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக உணர்வது அதிக யூரிக் அமிலம் காரணமாக இருக்கலாம். இது சோர்வு மற்றும் சோம்பலைத் தருவதுடன், உடலின் சக்தியைக் குறைக்கிறது

மூட்டு வலி

அதிக யூரிக் அமிலத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக திடீர் வலி, சிவத்தல் மற்றும் மூட்டுகளில் வீக்கம் போன்றவை அடங்குகிறது. குறிப்பாக, முழங்கால்கள், கால் விரல்களில் ஏற்படலாம். இது நோயின் ஆரம்ப அறிகுறியாக அமைகிறது

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அதிக யூரிக் அமில அளவுகளின் காரணமாக சிறுநீரக கற்கள் அல்லது தொற்றுகளுக்கு வழிவகுக்கலாம். இதனால் சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம் அல்லது எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது

குறிப்பு

இந்த அறிகுறிகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்வது அவசியமாகும். மேலும், நீரேற்றமாக இருப்பது, அதிக பியூரின் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் இயற்கையாகவே யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தலாம்