கருத்தடை மாத்திரை
பெண்களுக்கான சிறந்த மருத்துவ முன்னேற்றங்களில் ஒன்றாகவே கருத்தடை மாத்திரை அமைகிறது. ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்துவது பெண்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்
எடை அதிகரிப்பு
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளின் சாத்தியமான பாதகமான விளைவாக எடை அதிகரிப்பு அமைகிறது. ஆனால், ஆராய்ச்சியில் இது குறித்து சரிபார்க்கப்படவில்லை
கண் பிரச்சனை
சில ஆய்வுகளில் கார்னியா தடிப்பு பிரச்சனை ஏற்படுவது மாத்திரையால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையதாகும்
இரத்தப்போக்கு
மாதவிடாய் காலங்களுக்கு இடையில் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு ஏற்படலாம். இது சிறிய இரத்தப்போக்கு தோற்றம் அல்லது பழுப்பு வெளியேற்றமாக இருக்கலாம்
மனச்சோர்வு
கருத்தடை மாத்திரையானது மனச்சோர்வை ஏற்படுத்தும். இதற்கு ஹார்மோன் கருத்தடைகளைப் பயன்படுத்துவதன் பக்கவிளைவாக இருக்கலாம். குறிப்பாக இளம் வயதினர்கள் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர்
தவறிய மாதவிடாய்
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளை பயன்படுத்துவது லேசான பீரியட்ஸ் அல்லது மாதைடாய் தவறிய நிலை ஏற்படலாம்
இரத்த உறைவு
இந்த கருத்தடை மாத்திரைகள் ஒரு நபருக்கு இரத்தக் கட்டிகள் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்படும். நுரையீரலில் ஏற்படும் இரத்தம் உறைதலால் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம்
மருத்துவ ஆலோசனை
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, சுகாதார நிபுணரிடம் குறிப்பிட்ட ஆபத்து காரணிகளை நிவர்த்தி செய்வது அவசியமாகும்