உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் மக்னீசியமும் ஒன்று. குறிப்பாக, பெண்களுக்கு மக்னீசியம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் பெண்களுக்கு ஏன் மக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் முக்கியம் என்பதைக் காண்போம்
PMS அறிகுறிகளை எளிதாக்க
பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பல்வேறு பிரச்சனைகளைத் தருகிறது. மக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தி வீக்கம், பிடிப்புகள் போன்றவற்றைக் குறைக்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
மக்னீசியம் உட்கொள்ளல் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இது நிலையான இதயத் துடிப்பை பராமரிக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்
ஆற்றல் நிலைகளை மேம்படுத்த
மக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் ஆற்றல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சோர்வை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த உயிர்ச்சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
மக்னீசியம் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க மக்னீசியம் உதவுகிறது
மன அழுத்தத்தைக் குறைக்க
கார்டிசோல் அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம், மக்னீசியம் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்து மன அமைதியை ஊக்குவிக்கிறது
சிறந்த தூக்கத்திற்கு
மக்னீசியம் நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை தளர்த்த உதவுகிறது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது தூக்கமின்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது
குறிப்பு
அன்றாட உணவில் மெக்னீசியம் சப்ளிமெண்ட்களைச் சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு உதவுகிறது. இருப்பினும் எந்தவொரு சப்ளிமெண்ட்களையும் எடுத்துக் கொள்ளும் முன்பாக சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது