மார்பகங்களுக்கு கீழேயுள்ள கேண்டிடியாஸிஸ் என்ற ஈஸ்ட் தொற்று ஏற்படுவதால், சிவந்து போதல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும்.
எக்ஸிமா
மார்பகத்தைச் சுற்றி அல்லது தோலின் மற்ற பகுதிகளைச் சுற்றி அரிக்கும் சிவப்பு சொறி ஏற்படுகிறது. இது பொதுவாக சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க இயலாமை மற்றும் எரிச்சலிலிருந்து பாதுகாக்க உதவும் நல்ல பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது.
தடிப்புத் தோல் அழற்சியானது, கட்டுப்பாடற்ற தோல் செல் வளர்ச்சியின் காரணமாக உலர்ந்த, இறந்த சருமத்தின் அரிப்பு சிவப்பு திட்டுகளை உருவாக்குகிறது. மார்பகத்தின் மீது அல்லது கீழ் தடிப்புத் தோல் அழற்சியின் எரிச்சல் திட்டுகள் ஏற்படுவது பொதுவானது.
மார்பக வளர்ச்சி
கர்ப்பம், எடை அதிகரிப்பு அல்லது பருவமடைதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மார்பகங்கள் அளவு வளரலாம். இந்த வளர்ச்சி உங்கள் மார்பகங்களைச் சுற்றியுள்ள தோலை நீட்சி அடையச் செய்யும் போது, மார்பகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு ஏற்டக்கூடும்.
சரும வறட்சி
உங்கள் மார்பகப் பகுதியில் வறட்சி ஏற்படும் போது அரிப்பு ஏற்படக்கூடும். சரும பராமரிப்பு சாதனங்கள், சூரிய ஒளி ஆகியவை பொதுவாக சரும வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வாமை
பெண்கள் பயன்படுத்தும் சோப்பு, டிடர்ஜென்ட்,டியோடரண்டுகள், ஃபர்மியூம், காஸ்மெட்டிக் பொருட்களால் சருமத்தில் ஏற்படக்கூடிய ஒவ்வாமையும், மார்பகங்களில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.