அலுவலகம் மற்றும் வீட்டு வேலை என்று பகல் முழுவதும் உழைத்துவிட்டு, இரவில் நிம்மதியாக உறங்கவே ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். ஆனால் பல நேரங்களில் முதுகுவலி, மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக இரவில் சரியாக தூங்க முடியாது. இந்நிலையில், உங்கள் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்கினால், அது பல நன்மைகளை அளிக்கும்.
முதுகு வலி நிவாரணம்
இரவில் கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவது பெண்களுக்கு நன்மை பயக்கும். இது முதுகு வலியிலிருந்து நிறைய நிவாரணம் அளிக்கிறது.
மாதவிடாய் வலி
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற விரும்பினால், உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து தூங்கலாம். இதனால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணிகள் தங்கள் கால்களுக்கு இடையே தலையணையை வைத்து ஒருபுறம் திரும்பி படித்து தூங்குவது நல்லது. இது வயிற்றின் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தாது.
இரத்த ஓட்டம் மேம்படும்
இரவில் உங்கள் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், முதுகெலும்பு சீரமைப்பு மேம்படும்.
இடுப்பு வலி
இரவில் உறங்கும் போது இடுப்பு வலி ஏற்பட்டால் கால்களுக்கு இடையே தலையணையை வைத்து தூங்கலாம். இது உங்களை நிம்மதியாக உணர வைக்கும்.
சோர்வு நீங்கும்
சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க, இரவில் உங்கள் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்கலாம். இதனால், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
நல்ல தூக்கம்
இரவில் கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கினால், அமைதியின்மை குறையும். மேலும், ஒருவர் நிம்மதியான உறக்கத்தைப் பெறுகிறார், காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பார்.