கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவுமுறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் கர்ப்பிணிகள் காஃபி உட்கொள்வது தாய் மற்றும் சேய்க்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் காணலாம்
குழந்தை வளர்ச்சி பாதிப்பு
காஃபின் இல்லாத அம்மாக்களுக்குப் பிறந்த குழந்தைகளை ஒப்பிடுகையில், தினமும் அரை கப் காபி குடிக்கும் பெண்களுக்கு சற்று சிறிய குழந்தைகள் பிறப்பதாகக் கூறப்படுகிறது
தூக்க செயல்முறை பாதிப்பு
கர்ப்பிணி பெண்கள் ஒரு சிறிய அளவு கூட காஃபின் அருந்துவது, குழந்தைகளின் தூக்கம் மற்றும் இயக்க செயல்முறையைப் பாதிக்கலாம். குறிப்பாக கர்ப்பத்தின் பிற்பகுதியில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்
இரத்த அழுத்தம் அதிகரிப்பு
காஃபின் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் சிறுநீர் கழித்தல் விளைவுகளை அதிகரிக்கிறது. எனவே நீரிழப்பு மற்றும் உடலில் கூடுதல் அழுத்தத்தைத் தடுக்க கர்ப்ப காலத்தில் காஃபின் தவிர்க்கப்பட வேண்டும்
இரத்த விநியோகம் குறைப்பு
கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியில் உள்ள இரத்த நாளங்களை இறுக்கச் செய்வதாக காஃபின் அமைகிறது. இது கருவுக்கு இரத்த விநியோகத்தைக் குறைத்து, வளர்ச்சியை பாதிக்கிறது
குறிப்பு
வெறும் காபி மட்டுமல்லாமல் தேநீர், சாக்லேட், சோடா மற்றும் சில மருந்துகளிலும் காஃபின் நிறைந்திருக்கலாம். எனவே அதன் உட்கொள்ளலைக் கண்காணிப்பது நல்லது