மாதவிடாய் காலத்தில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
09 Jul 2024, 17:30 IST

பீட்ரூட் சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் பெண்கள் பீட்ரூட் சாறு அருந்துவது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

பீட்ரூட் சாற்றில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும், மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு தாதுக்களும் நிறைந்துள்ளது. இது மாதவிடாய் காலத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

மாதவிடாய் காலத்தில் பீட்ரூட் சாறு அருந்துவது இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

பீட்ரூட்டில் சிலிக்கா நிறைந்துள்ளது. இவை மாதவிடாய் காலத்திலும், அதற்கு அப்பாலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

செரிமான ஆரோக்கியம்

பீட்ரூட் சாறு அதிகளவிலான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வழக்கமான குடல் இயக்கங்களை ஆதரிக்கிறது

ஆற்றலை அதிகரிக்க

பீட்ரூட் சாற்றில் உள்ள இரும்புச்சத்து சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது

இதய ஆரோக்கியம்

பீட்ரூட்டில் நிறைந்துள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. குறிப்பாக, மாதவிடாய் நின்ற பிறகு பெண்களிடம் அதிகரிக்கும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது .