கர்ப்பிணிகள் முளைகட்டிய பயிறுகளை சாப்பிடலாமா?

By Gowthami Subramani
27 Jul 2024, 17:30 IST

கர்ப்பிணிகளுக்கு முளைகட்டிய பயறு

கர்ப்ப காலத்தில் பெண்களுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் புரதச்சத்துக்களும் ஒன்று. அந்த வகையில் முளைகட்டிய பயறு கர்ப்பிணிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்

எப்படி சாப்பிடலாம்?

கர்ப்பிணிகள் முளைக்கட்டிய பயறு வகைகளை பச்சையாக எடுத்துக் கொள்வதை விட, அவித்த நிலையில் சாப்பிடுவது நல்லது. அவிக்காத நிலையில் பச்சையாக உள்ள பயறுகளில் கிருமி இருக்கலாம். இவை கருவின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்

சமைத்த நிலையில்

முளைகட்டிய பயறு வகைகள் அவித்து வெதுவெதுப்பான நிலையில் எடுத்துக் கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்

ஊட்டச்சத்துக்கள்

முளைகட்டிய பயறு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் கே, சி, ஈ மற்றும் பி9 போன்றவை ஆகும். இவை கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

முதுகு வலி பிரச்சனைக்கு

முளைகட்டிய பயறில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்றவை காணப்படுகிறது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும் இது கர்ப்பிணி பெண்களின் முதுகு வலி பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவுகிறது

மலச்சிக்கல் நீங்க

முளைக்கட்டிய பயறு வகைகள் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆதாரமாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவுகிறது

குறிப்பு

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கிய நிலையைப் பொறுத்து அவர்களின் உணவு கட்டுப்பாடு வழக்கம் மாறுபடும். எனவே முளைகட்டிய பயறு வகைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது