பெண்களுக்கு இரும்புச்சத்து ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

By Gowthami Subramani
26 Oct 2024, 10:08 IST

பெண்களின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து முக்கியமானதாகும். குறைந்த அளவு இரும்புச்சத்து காரணமாக பெண்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் பெண்களுக்கு இரும்புச்சத்து ஏன் முக்கியம் என்பதைக் காணலாம்

குறைந்த இரும்புச்சத்து

பெண்கள் குறைந்தளவு இரும்புச்சத்து காரணமாக சோர்வு, மாதவிடாய் சுழற்சி பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்

செயல்திறனை மேம்படுத்த

இரும்புச்சத்து உட்கொள்ளல் உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துவதுடன், மாதவிடாய் பெண்களின் சோர்வைக் குறைக்க உதவுகிறது

இரத்த சோகையைத் தடுக்க

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தலாம். குறிப்பாக, அதிக மாதவிடாய் உள்ளவர்கள் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு அதிக ஆபத்தில் உள்ளனர். சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது இரத்த சோகையைத் தடுக்க உதவுவதுடன், சோர்வு, பலவீனத்திற்கு வழிவகுக்கிறது

நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு

இரும்புச்சத்துக்களின் உதவியுடன் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கலாம். இதன் போதுமான அளவுகள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது

ஆற்றல் நிலைகளை ஆதரிக்க

இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து முக்கியமானதாகும். போதுமான இரும்புச்சத்துக்களின் உதவியுடன் உடல் ஆற்றலைப் பராமரிக்கவும், சோர்வைக் குறைக்கவும் முடியும்

கர்ப்பகால ஆரோக்கியத்திற்கு

கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும் இரும்புச்சத்து அவசியமாகக் கருதப்படுகிறது. இது உயர்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது