மாதவிடாய் சுழற்சியின் போது சாக்லேட் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இங்கே காண்போம்.
வயிற்றுப்பிடிப்பை போக்கும்
டார்க் சாக்லேட்டில் உள்ள மெக்னீசியம், இது தசைகளை தளர்த்தி வலியில் இருந்து நிவாரணம் தர உதவுகிறது.
சோம்பல் நீங்கும்
மாதவிடாய் காலத்தில் இரத்த இழப்புகள் ஏற்படுவதால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இது சோம்பலை தரக்கூடும். இதனை தடுக்க டார்க் சாக்லேட் உதவுகிறது.
மகிழ்ச்சியான ஹார்மோன் அதிகரிக்கும்
சாக்லேட் சாப்பிடும் போது, டோபமைன், செரோடோனின் மற்றும் எண்டோர்பின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் அதிகரிக்கும்.
மன அழுத்தத்தை போக்கும்
டார்க் சாக்லேட் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்கிறது.
வீக்கத்தை குறைக்கும்
டார்க் சாக்லேட்டில் பொட்டாசியம் உள்ளது. இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.
இரத்த ஓட்டம் மேம்படும்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பை சரி செய்யவும் சாக்லேட் உதவுகிறது.