கருத்தரிக்க விரும்புவோர் இந்த அறிகுறிகளில் கவனமா இருங்க!

By Kanimozhi Pannerselvam
31 Jan 2024, 20:50 IST

வெள்ளைப்படுதல்

அண்டவிடுப்பின் போது கர்ப்பப்பை வாயில் இருந்து அதிகப்படியான வெள்ளை நிற திரவம் வெளியேறும். இது அண்டவிடுப்பிற்கு முன் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும்.

வெப்பநிலை உயர்வு

அண்டவிடுப்பின் போது உடல் வெப்பநிலை அரை டிகிரி அல்லது அதற்கும் குறைவாக உயரக்கூடும். இந்த அதிக வெப்பநிலை மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேல் சீராக இருந்தால், அது அண்டவிடுப்பிற்கான அறிகுறியாகும்.

இடுப்பு தசைப்பிடிப்பு

கருப்பை முட்டையை வெளியிடுவதை உணர்த்தும் விதமாக சில பெண்களுக்கு கடும் இடுப்பு வலி ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அண்ட விடுப்பின் போது நுண்ணறைகளில் இருந்து முட்டை வெளியேறுவதால் ஏற்படக்கூடிய வலியாகும்.

மார்பகத்தில் மாற்றம்

மார்பகம் மென்மையடைவது அண்டவிடுப்பின் மிக முக்கியமான அறிகுறியாக கருதப்படுகிறது. அண்டவிடுப்பிற்கு பின்னர் ஏற்படும் புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்.

வீக்கம்

புரோஜெஸ்ட்டிரோன் காரணமாக பிறப்புறுப்புகளின் வெளிப்புறத்தில் ஏற்படும் பிறப்புறுப்பு வீக்கம் அண்டவிடுப்பின் இரண்டாவது மிக முக்கியமான அறிகுறியாகும்.

முதுகு வலி

அண்டவிடுப்பிற்கு பின்னர் புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பது முதுகு தண்டின் வளைவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் முதுகுவலி அண்ட விடுப்புடன் தொடர்புடைய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.