மாதவிடாய் நிற்கும் சமயமா? உடல் ஆரோக்கியத்திற்கு இத ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
23 May 2024, 17:30 IST

மாதவிடாய் நிறுத்தம்

பெண்கள் பொதுவாக 40-களின் பிற்பகுதியில் மாதவிடாய் நிறுத்தத்தை சந்திப்பர். இது மெனோபாஸ் நிலை எனப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகும். இதில் மெனோபாஸின் போது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் குறிப்புகளைக் காணலாம்

உடற்செயல்பாடுகளில் ஈடுபடுவது

யோகா, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றைச் செய்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தொடர் உடற்பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகியது. இது மாரடைப்பு போன்ற பல்வேறு இதய பிரச்சனைகளைத் தடுக்கிறது

எடை பராமரிப்பு

ஆரோக்கியமாக இருக்க சீரான உணவை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும், பகுதியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்துடன் தொடர்பான உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்கலாம்

சமநிலையான உணவு

நன்கு சமநிலையான உணவை உட்கொல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்க உதவுகிறது. அதன் படி, காய்கறிகள், பழங்கள், புரதங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும்

சரியான தூக்க அட்டவணை

தூக்க அட்டவணையைப் பின்பற்றி உடலின் தூக்க தேவையைப் பூர்த்தி செய்யலாம். இது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், தெளிவான சிந்தனையைத் தருவதுடன், இதய நோய்களின் குறைந்த ஆபத்து போன்ற சிறந்த ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

யோகா, தியானம், ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். இவ்வாறு மன அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கவும், இதய தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது