கர்ப்ப காலத்தில் கால் வீக்கம்.. குறைப்பது எப்படி..!

By Kanimozhi Pannerselvam
29 Mar 2024, 14:16 IST

நிபுணர்களிடம் உரிய பரிந்துரை பெற்ற பின்னர், நடைபயிற்சி, லேசான உடற்பயிற்சி, குறுகிய யோகாசனங்கள் கால்களின் வீக்கத்தை குறைக்க உதவும். ஆனால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட காலுறைகளை அணியுங்கள்.

கர்ப்பிணி பெண்கள் கால் வீக்கத்தை உணர்ந்தால், கால்களுக்குக் கீழே ஒரு தலையணையை வைத்து படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் கால்களுக்கு அடியில் ஸ்டூலை வைத்து கால்கள் சற்று உயரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சிறிது நடக்கவும். இது கால்களின் வீக்கத்தைக் குறைக்கிறது.

கர்ப்பிணிகள்,இடது பக்கம் தூங்குவது நல்லது. இப்படி தூங்கினால், கால்களில் இருந்து இதயத்துக்கும், அங்கிருந்து மூளைக்கும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இப்படி தூங்கினால் கால் வீக்கம் குறையும்.

பிபி மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை தவறாமல் செய்து கொள்ள வேண்டும். எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும்.