கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இரத்த சோகை உள்ளது. இதில் இரத்த சோகைக்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள் குறித்து காணலாம்
இரத்த சோகை ஏற்பட காரணம்
உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை செலுத்துவதில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உடலில் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது
அறிகுறிகள்
இரத்த சோகை காரணமாக அதிக சோர்வு, கவனிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல், இதயத்துடிப்பு அதிகரிப்பு, தோல் நிறம் மாறுதல் போன்றவை ஏற்படலாம்
ஃபோலேட் குறைபாடு
உடலில் வைட்டமின் பி12 சத்து குறைபாடு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை இரத்த சோகைக்கு வழிவகுக்கலாம். கர்ப்ப காலத்தில் இந்த அளவை பராமரிப்பது மிகவும் அவசியமாகும்
இரும்புச்சத்து குறைபாடு
உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சோகை பிரச்சனை ஏற்படலாம். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனையால் அவதியுறுகின்றனர்
பாதிப்புகள்
இரத்த சோகை பிரச்சனையால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தில் இறக்கும் அபாயம் ஏற்படலாம். இது தவிர, குறை பிரசவம், குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பது போன்ற பாதிப்புகளும் ஏற்படும்
வைட்டமின் மாத்திரைகள்
ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உட்பட இன்னும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் அடங்கிய வைட்டமின் மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் உட்கொள்வதற்கு நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது
உணவு மாற்றங்கள்
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான மீன், சிக்கன், நட்ஸ், முட்டை, பீன்ஸ், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்
மருத்துவ ஆலோசனை
கர்ப்ப காலத்தில் உடல் நல ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறிய மாற்றங்களை சந்தித்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இரத்த சோகை பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் எளிதாக சரி செய்திடலாம்