இதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் அதிகப்படியான நீரை தடுக்கவும், ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சப்ஜா விதைகள்
நார்ச்சத்து நிறைந்தது. இது குடல் இயக்கத்தை தூண்டுகிறது மற்றும் பல்வேறு செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. மேலும், இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால் வயிற்றைச் சுற்றிக் குவிந்துள்ள கொழுப்பைக் கரைக்கும்.
கலோரிகள் குறைவாக உள்ள ஆப்பிள் சீடர் வினிகர் கெட்ட கொழுப்பைக் கரைப்பதில் திறம்பட செயல்படும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இலவங்கப்பட்டை
நம் உடலில் வெளியாகும் கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் வயிற்றில் கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிறது. அதனால்தான் இந்த ஹார்மோனின் அளவைக் குறைப்பதில் இலவங்கப்பட்டை திறம்பட செயல்படுகிறது.
பச்சைக் காய்கறிகள்
இவற்றில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநலப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது உடலிலும், வயிற்றிலும் சேரும் கெட்ட கொழுப்பை மறைமுகமாக குறைக்கிறது.
பருப்பு வகைகள்
ஃபோலிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை வயிற்றைச் சுற்றி தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்க மிகவும் உதவியாக இருக்கும்.