மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வைப் போக்க செய்ய வேண்டியவை!

By Gowthami Subramani
16 Jul 2024, 09:00 IST

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு என்பது பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றமாகும். இதில் அவர்கள் கடுமையான சோர்வு, தொடர் அழுகை, குழந்தையுடன் பிணைப்பு இல்லாமை போன்றவை உணரலாம். இந்த மனச்சோர்வைக் கையாள்வதற்கான குறிப்புகளைக் காணலாம்

ஆரோக்கியமான உணவுமுறை

புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்

உடற்பயிற்சி

ஓடுதல், நடைபயிற்சி, யோகா போன்ற சில வகையான உடல் செயல்பாடுகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஒமேகா 3 உட்கொள்ளலை அதிகரித்தல்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்து, மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது

தனிமையைத் தவிர்ப்பது

தனிமையில் இருக்காமல் தங்களது நிலைமைகளை குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களிடம் பகிர்வது நிதானமாகவும், அமைதியாகவும் உணரவைக்கும்

நல்ல தூக்கம்

புதிய தாய்மார்களுக்கு சரியான ஓய்வு என்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் தூக்கமின்மை மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். எனவே மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க நன்றாக தூங்குவது அவசியமாகும்

சுய பராமரிப்பு

குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களுக்கு அவர்களைக் கவனித்துக் கொள்வது கடினம். இது அவர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்கலாம். எனவே தாய்மார்கள் தங்களுக்கென நேரம் ஒதுக்கி சுய பராமரிப்பில் ஈடுபடலாம்

மருத்துவரை நாடுதல்

மனச்சோர்வைக் கையாள கடினமாக இருப்பின், தேவை ஏற்படும் போது மனநல மருத்துவரை அணுகலாம். மருத்துவர் அல்லது நிபுணர்களின் உதவியுடன் மனச்சோர்வைக் கையாளலாம்