கர்ப்ப காலத்தில் சுகர் லெவலைக் குறைக்க உதவும் வழிகள்

By Gowthami Subramani
27 Jan 2025, 21:01 IST

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பு ஆகும். இதில் கர்ப்பிணி பெண்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சில பயனுள்ள வழிகளைக் காணலாம்

சமச்சீரான உணவு

அன்றாட உணவில் காய்கறிகள், முழு தானியங்கள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம். மேலும் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த சர்க்கரை சிற்றுண்டிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்

நீரேற்றமாக இருப்பது

இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் ஆதரிக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை பானங்களைத் தவிர்த்து, உடலை போதுமான அளவு நீரேற்றமாக வைக்க தண்ணீர் அல்லது இனிக்காத மூலிகை தேநீர் வகைகளைத் தேர்வு செய்யலாம்

புதிய பழங்களைத் தேர்ந்தெடுப்பது

ஆப்பிள், பெர்ரி மற்றும் பேரிக்காய் போன்ற குறைந்த GI கொண்ட பழங்களைத் தேர்ந்தெடுக்கலாம். எனினும் சர்க்கரை அதிகரிப்பை நிர்வகிக்க அதிக சர்க்கரை பழங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

சுறுசுறுப்பாக இருப்பது

நடைபயிற்சி அல்லது மகப்பேறுக்கு முற்பட்ட யோகா போன்ற மென்மையான செயல்பாடுகள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனினும் புதிய உடற்பயிற்சி வழக்கத்தைத் தொடங்கும் முன்னதாக எப்போதும் மருத்துவரை அணுகுவது நல்லது

போதுமான தூக்கம்

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு 7-8 மணி நேர தூக்கம் மேற்கொள்வது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் தூக்கம் சீர்குலைந்தால், வழிகாட்டுதலுக்காக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்