பீரீயட்ஸ் பேடை எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்?

By Gowthami Subramani
18 Feb 2025, 16:37 IST

மாதவிடாய் சமயத்தில் சானிட்டரி பேடை அடிக்கடி மாற்றுவது சரியல்ல என்று பெண்கள் பலரும் நினைப்பர். உண்மையில் இந்த காலத்தின் போது சானிட்டரி பேடை அவ்வப்போது மாற்றுவது முக்கியமானதாகும். இதில் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை பேடை மாற்ற வேண்டும் மற்றும் இது ஏன் முக்கியம் என்பதைக் காணலாம்

தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பு

அதிக நேரம் பேடை வைத்திருப்பதால் தொற்று அபாயம் அதிகரிக்கலாம். பேடை மாற்றுவதன் மூலம் எரிச்சலைத் தவிர்க்கலாம். மேலும் அந்தப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதும் சிறந்த வழியாகும்

துர்நாற்றத்திலிருந்து விடைபெறுவது

மாதவிடாய் பேடை மாற்றாமல் இருப்பது கெட்ட துர்நாற்றங்களை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு சில மணி நேரத்திற்கும் ஒரு முறை பேடை மாற்றுவது கனமான நாட்களில் கூட புத்துணர்ச்சியுடனும், நாற்றமில்லாமல் உணர வைக்கும்

கசிவுகளைத் தவிர்ப்பது

சரியான நேரத்தில் பேடை மாற்றுவதன் மூலம், அதிலிருந்து வெளியேறும் கசிவுகளைத் தவிர்க்கலாம். மேலும் இதன் மூலம் சங்கடமான சூழ்நிலைகளைத் தடுக்கலாம்

கவலையை நீக்க

சங்கடமான பேடுகள் அரிப்பு மற்றும் வலி போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம். எனவே ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் அதை மாற்றுவதன் மூலம் எந்தக் கவலையும் இல்லாமல் நாளைக் கழிக்க வசதியானதாக மாற்றுகிறது

நல்ல சுகாதாரம்

மாதவிடாய் காலத்தில் நல்ல சுகாதாரத்தைப் பேணுவது அவசியமாகும். எனவே ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு முறை பேடை மாற்றுவது சுத்தமாகவும், மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க உதவுகிறது

சுய பராமரிப்பு

இது போன்று வழக்கமாக பேடை மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தலாம். இது சிறந்த சுய பராமரிப்புக்கான பழக்கமாகும்