பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் வலி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் மாதவிடாய் வலி குறைய சில வீட்டு வைத்தியங்களைக் கையாள வேண்டும்
மூலிகை டீ
இஞ்சி டீ அல்லது கெமோமில் டீ போன்ற சில மூலிகை டீ வகைகள் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இது மாதவிடாய் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது
ஹீட் பேக்
அடிவயிற்றில் வெப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தசை பிடிப்புகளைப் போக்கவும், தசைகளை தளர்த்தவும் உதவுகிறது. சூடான தண்ணீர் பாட்டில் அல்லது சூடான துண்டின் உதவியுடன் நிவாரணம் பெறலாம்
சூடான குளியல்
சூடான நீரில் குளியல் செய்வதன் மூலம் தசைகளைத் தளர்த்தவும், பதற்றத்தைக் குறைக்கவும் முடியும். இது மாதவிடாய் தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
மசாஜ் செய்வது
மாதவிடாய் வலி நீக்க வயிறு மற்றும் கீழ் முதுகில் மென்மையான மசாஜ் செய்யலாம். இது பதற்றம் மற்றும் தளர்வை குறைக்க உதவுகிறது
மக்னீசியம் நிறைந்த உணவுகள்
மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் பிடிப்பைப் போக்குவதுடன், தசைகளைத் தளர்த்த உதவுகிறது. இதற்கு நட்ஸ், விதைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்ற மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்