ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? இதில் பெண்கள் ஏன் அதிக நேரம் தூங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்
அதிக தூக்கம் யாருக்கு?
பெண்கள் பல்வேறு காரணங்களால் அதிகளவு தூக்கமின்மை அனுபவிப்பதால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கே அதிக தூக்கம் தேவைப்படுகிறது. இதில் பெண்களுக்கு ஏன் அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்பதை விரிவாக காணலாம்
மோசமான தூக்கம்
சில வாழ்க்கை நிலைகள் மற்றும் உடலியல் மாற்றங்களால் பெண்கள் சரியான தூக்கம் பெறுவதில்லை. இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். எனவே தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது
பிஸியான கால அட்டவணை
ஆண்களை விட பெண்களுக்கு பிஸியான கால அட்டவணை உள்ளது. பெண்கள் வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு அதிக ஓய்வு பெறுவதில் சிக்கல் உண்டாகலாம்
அதிக எடை
ஆண்களை விட பெண்களுக்கு உடல் எடையைக் குறைப்பது கடினமாக இருக்கும். இதற்கு சரியான அளவு தூக்கம் இல்லாதது காரணமாகலாம். ஏனெனில் தூக்கமின்மையால் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை வெளியிடுவதற்கு வழிவகுக்கிறது. இது உடல் பருமனுக்கு வழிவகுக்கலாம்
கால் நோய்க்குறி
பெண்கள் பலரும் கால் நோய்க்குறியால் அவதிப்படுகின்றனர். இது கால்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாடற்ற தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக இதன் அறிகுறிகள் மாலை மற்றும் இரவில் மோசமாகலாம். இது பெண்களுக்கு தூங்குவதில் சிக்கலை உண்டாக்கலாம்
நல்ல தூக்கம் பெறுவது எப்படி?
தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது, இரவில் காபி, டீ அல்லது மது அருந்துவதைத் தவிர்ப்பது, நல்ல தரமான படுக்கையைப் பயன்படுத்துதல், உறங்கச் செல்வதற்கு முன்பாக நீலநிற ஒளி வெளிப்பாட்டைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம்